பொருளாதார மையம்: முதல்வர் விக்கி மீது அஸ்மின் குற்றசாட்டு! யார் பதில் சொல்வார்?

பொருளாதார மையம்: முதல்வர் விக்கி மீது அஸ்மின் குற்றசாட்டு! யார் பதில் சொல்வார்?

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் விடயத்தில் “மக்கள் நலன்” என்கின்ற விடயம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அறிய முடியவில்லை, அரசியல் தலைவர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது; இதுகுறித்த கள ஆய்வுகள்  Feasible Studies and Field Research  முன்னரே மேற்கொள்ளப்பட்டு தாண்டிக்குளம் அதற்குப் பொருத்தமானது என்று தீர்மானிக்கப்பட்டது, மேற்படி விடயம் வடக்கு மாகாணசபையின் ஜூன் மாத முதலாம் அமர்விலும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஏகமனதான தீர்மானமாக தாண்டிக்குளத்தில் அமைத்தல் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த சந்தர்ப்பங்களில் முதலமைச்சர் கூறுகின்ற நிபுணர்களின் அறிக்கை வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை என்ற வருத்தமான செய்தியை இங்கு பதிவிடுதல் நன்று என நினைக்கின்றேன்; அது மாத்திரமன்றி வவுனியா மக்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் கருத்துக்களுக்கு இவ்விடத்தில் முக்கியத்துவம் வழங்கப்படுதல் வேண்டும். மேற்படி விடயத்தை இனரீதியாக நோக்குவதும், அரசியல் ரீதியாக நோக்குவதும் எவருக்கும் பயனுடையதல்ல, மேற்படி விடயத்தை அனைத்து அரசியல் தலைவர்களும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila