சிலரது தேவைக்காகவே யாழ்.பல்கலையில் மோதல் இடம்பெற்றுள்ளது : சுவாமிநாதன் (2ஆம் இணைப்பு)

jaffna meeting  (2)

அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, சிலரது தேவைக்காகவே நடத்தப்பட்டுள்ளதாக, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். குறித்த மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்.பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர், ஊடகங்களிடம் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் சிங்கள வேற்றுமை இல்லையென மாணவர்கள் குறிப்பிட்டதாகவும், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என்பதே மாணவர்களின் நிலைப்பாடாக உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார். அத்தோடு, ஒரு சிலரின் தேவைக்காக நடத்தப்பட்ட குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் இன்னும் இரு வாரங்களுக்குள் விசாரணை குழுவொன்றை அமைத்து தீர்வு காண்பதாக யாழ.பல்கலைக்கழகத்தின் வேந்தர் தம்மிடம் குறிப்பிட்டதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழக விவகாரம் : அரச உயர்மட்ட குழு யாழ் விஜயம் யாழ்.பல்கலைக்கழகத்தில் அண்மையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆராய்வதற்காக, கொழும்பிலிருந்து அரச உயர்மட்டக் குழுவொன்று யாழ் சென்றுள்ளது. குறித்த குழுவில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண உள்ளிட்டோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றபோது, இரு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு, பின்னர் கைகலப்பில் முடிந்தது. இதனையடுத்து மூடப்பட்ட யாழ் பல்கலைக்கழகம், நாளை பகுதியளவில் திறக்கப்படவுள்ளதாக, யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பல்கலையின் துணைவேந்தர் வசந்தி அரசரட்னம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
jaffna meeting  (2) jaffna meeting  (3)
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila