
பிரபாகரனைத் தேசியத்தலைவர் என துதிபாடு வதையும் புலிகளை தியாகிகள் என பிரச்சாரம் செய்வதையும் தமிழரசுக்கட்சியினர் இனி மேலாவது கைவிட ஆலோசனை வழங்கியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன்.
எனினும் இதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலனை மிரட்டியுள்ளார் சிறீதரன்
வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் அண்மைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரபாகரனை தேசியத்தலைவர் என துதிபாடுவதையும் புலிகளை தியாகிகள் என பிரச்சாரம் செய்வதையும் தமிழரசுக்கட்சியினர் இனிமேலாவது கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
அவ்வேளையில் நாடாளுமனற் உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலன் தேர்தல் காலத்தில் எங்களிற்கு பிரபாகரன் தேவை, புலிகள், மாவீரர்கள் தேவை, தேர்தலில் வென்ற பின்னர் அவர்கள் தேவையில்லையாயென கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மௌனம் காத்திருக்க சிறீதரனே மௌனமாக இருக்க ஆலோசனை வழங்கியுள்ளதோடு சார்ள்ஸின் கருத்துக்கும் எதிர்பு வெளியிட்டுள்ளார்.