யுத்தத்திற்கு முன்னர் விகாரை இல்லாத முல்லைத்தீவு மாவட்டத்தில் யத்தத்தின் பின்னர் 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். மாங்குளம், வட்டுவாகல், ஒட்டுசுட்டான், கொக்கிளாய், மண்ணாகண்டல், சமளம்குளம், புதுக்குடியிருப்பு, சுகந்திரபுரம் மற்றும் கேப்பாபுலவு பகுதிகளில் இந்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
வரலாற்று ரீதியாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விகாரைகள் இருந்திராத முல்லைதீவில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து விகாரைகளும் படையினரது பங்களிப்புடனேயே அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவை அனைத்துமே 2009 யுத்த முடிவின் பின்னராக அமைக்கப்பட்டவையெனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.