யாழ். பல்கலைக்கழகத் தாக்குதல் ஆளுநரின் சூழ்ச்சியா? வெளிவரும் உண்மைகள்


யாழ். பல்கலைக்கழகத் தாக்குதலுக்கு தன்னுடைய சூழ்ச்சிதான் காரணம் என்று பல செய்திகள் வெளிவருவதாகவும், அவை முற்றிலும் பொய்யான விடயம் எனவும் வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், யாழ். பல்கலைக்கழகத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியாது. இவ்வாறிருக்க பொய்யான சம்பவங்களைக் கூறி மாணவர்களுக்கிடையில் சிலர் இனவாதத்தை தூண்டுவதாக குற்றம் சுமத்தினார்.

தற்போது நாட்டில், நல்லாட்சி நடைபெறுகின்றது, தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழும் சூழல் காணப்படுகின்றது, தேசிய கீதம் தமிழிழும் பாடப்படுகின்றது. ஆனால் இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் பலர் முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.

உண்மையில் யாழ். பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தமிழ் மாணவர்களே காரணம். பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே குறித்த நிகழ்வுகள் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் தமது நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

அதன் பின் சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களைப் பின் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு வெளியில் சென்று தமது நடனத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் இதற்கு தமிழ் மாணவர்கள் ஒத்துழைக்காமல் முதலில் பிரச்சினையை தோற்றுவித்தார்கள். இதுவே அங்கு நடந்த உண்மைச் சம்பவம் என ரெஜிநோல்ட் குரே கூறினார்.

பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க தமிழ் மாணவர்களே பிரச்சினையை உறுவாக்கியதாக தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்கு நான்தான் காரணம் என்று கூறி எனது புகைப்படத்துடன் செய்திகள் வெளிவருகின்றன. இது முற்றிலும் பொய்யான ஒன்று. நான் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றேன், அங்கு அனைத்து மாணவர்களையும் கண்டு கலந்துரையாடினேன். மேலும் தாக்குதலுக்குள்ளான மாணவனை வைத்தியசாலையில் சென்று பார்த்தேன் இதுதான் நடந்தவையென வட மாகாண ஆளுநர் கூறினார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila