முல்லைத்தீவு- கொக்கிளாய் கிழக்கு கடற்கரை பகுதியில் கடற்றொழில் செய்வதற்காகவாடிகளை அமைத்த தமிழ் மீனவர்களை சிங்கள மீனவர்கள் மற்றும் பொலிஸார், பௌத்தபிக்கு ஆகியோர் இணைந்து விரட்டியடித்துள்ளதுடன், தமிழ் மீனவர்கள் அமைத்த வாடிகளையும்பிடுங்கி எறிந்து அட்டகாசம் புரிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட கொக்கிளாய் மீனவர்கள்குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதேவேளை முல்லைத்தீவு பொலிஸாருக்கு சிங்கள மீனவர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில்மேற்படி கொக்கிளாய் கிழக்கு கடற்கரையில் வாடி அமைத்துக் கொண்டிருந்த 19 தமிழ்மீனவர்கள் மற்றும் 2 கிறிஸ்தவ பாதிரியார்களை முல்லைத்தீவு பொலிஸார் இன்று பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு எழுத்து மூலம் அழைப்பாணைவிடுத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் குறிப்பிடுகையில்,
கொக்கிளாய் மீனவர்களுக்கான மீன்பிடி துறை ஒன்று போருக்கு பின்னர் அமைத்துக்கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு கடற்றொழில் தி ணைக்களத்தின் கொக்கிளாய் பகுதிக்கான கடற்றொழில் பரிசோதகர் ஊடாக கொக்கிளாய்கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி துறைக்கான இடத்தினைஅடையாளப்படுத்திய பின்னர் போக்குவரத்து வசதிகள் பற்றாக்குறையாக இருந்தமையினால்நாங்கள் அந்த பகுதிக்கு சென்று வாடிகளை அமைத்து தொழில் செய்யவில்லை.
கொக்கிளாய்ஆற்றில் தொழில் செய்தோம். இந்நிலையில் ஆற்றில் தொழில் செய்வதுஇறுக்கமாக்கப்பட்டிருக்கும் நிலையில், நாங்கள் எமக்கு ஒதுக்கப்பட்ட எங்களுடைய முன்னோர்கள் பாரம்பரியமாக தொழில் செய்த கொக்கிளாய் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சென்று தொழில் செய்ய தீர்மானித்து நேற்றைய தினம் கடற்கரைக்கு சென்றிருந்தோம்.
இதன்போது அங்கே அத்துமீறிதமிழர்களுடைய கரைவலைப்பாடுகளை அபகரித்து சட்டவிரோதமான தொழில்களையும் செய்துவரும்3 தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் எம்மை கடுமையாக திட்டியதுடன் தங்களுடைய கரையோரபகுதியில் இருந்து உடனடியாகவே வெளியேற வேண்டும். எனவும் அவர்கள் கூறினார்கள்.
ஆனால் அவர்கள் வருவதற்குமுன்னதாகவே நாங்கள் அங்கே வாடிக்கான கொட்டில்களை அமைத்து விட்டோம். இந்நிலையில்எங்களுடன் முரண்பட்டுக் கொண்ட சிங்கள மீனவர்கள்(சம்மாட்டிகள்) மூவர் பின்னர்பொலிஸார் மற்றும் தமிழர்களுடைய நிலத்தை அபகரித்து விகாரை அமைத்துவரும் பௌத்தபிக்கு ஆகியோர்கடற்கரைக்கு வந்து எங்களை கடுமையாக திட்டியதுடன், உடனடியாகவே வாடிக்கான கொட்டில்களைகழற்றிக் கொண்டு கரையோரத்தை விட்டு வெளியேற வேண்டும். என எங்களைகட்டாயப்படுத்தியதுடன், அந்த பகுதியில் கடற்றொழில் செய்வதற்கான அனுமதி எங்கே? எனகேட்டு மிரட்டினர்.
இக்கட்டான நிலையில் வாடியை கழற்ற முயன்றவேளை பொலிஸாரும்இணைந்து வாடியை பிடுங்கி எறிந்து அட்டகாசம் புரிந்தனர்.
இத்தனைக்கும் அந்த பகுதி நாங்கள் பூர்வீகமாகதொழில் செய்துவரும் நிலம். அங்கேயே எங்களுக்கு இடமில்லை. எனகூறியிருக்கின்றார்கள்.
மேலும் பொலிஸாரும் இந்த விடயத்தில் இருபக்கங்களிலும் உள்ளசரி பிழைகளை பார்க்காமல் பெரும்பான்மை இன மக்களுக்காக மட்டும் அவர் பேசியும்செயற்பட்டும் இருக்கின்றார்.
இது மட்டும் இல்லாமல் கொக்கிளாய் பகுதியில் தமிழ் மக்களுக்கு சிங்கள மீனவர்கள் பொலிஸாருடையதும்,படையினருடையதும் ஒத்துழைப்புடன் செய்யும் அநியாயங்கள் கொஞ்சம் அல்ல.
கடற்கரையில்தமிழ் மீனவர்கள் மீன் கூறலுக்கு போனால் கூ ட சிங்கள மீனவர்கள் மீனை காலால் தட்டியேஎமது தமிழ் மீனவர்களுக்கு கொடுக்கிறார்கள்.
இதனால் 2012ம் ஆண்டு எங்களுக்குகொடுக்கப்பட்ட வள்ளங்களை பயன்படுத்தி தொழில் செய்ய முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
எங்களுடையபகுதியில் கடற்றொழி ல் செய்து கொண்டிருக்கும் 3 தென்னிலங்கை சம்மாட்டிகள் எங்களுடையகரைவலை பாடுகளுக்கு பதிலாக தற்காலிக அனுமதி பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டுதொழில் செய்கிறார்கள்.
அவர்கள் எங்கே அனுமதி பெ ற்றார்கள்? அவர்கள் செய்யும்தொழில் சட்டரீதியானதா?என்பதையெல்லாம் பார்க்காத பொலிஸார் எங்களை துரத்தியடிக்கின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள், நாங்கள்தொழில் செய்ய முடியாதென்றால் நாங்கள் எங்கே போய் தொழில் செய்வது? தமிழ்அரசியல்வாதிகள் இந்த விட யத்தை சற்றே கவனத்தில் கொள்ளுங்கள் என கொக்கிளாய்பகுதி மீனவர்கள் கேட்டுள்ளனர்.