
யாழ். பல்கலைக்கழகத்தில் கண்டி நடனம் வைப்பது தொடர்பில் நடந்த சிங்கள, தமிழ் மாணவர்களுக்கான மோதலைத் தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழகம் மூட ப்பட்டது யாவரும் அறிந்ததே. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுபற்றி அவசர அவசரமாக ஒரு அறிக்கையை விட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிங்கள மாணவர்களை யாழுக்கு வருமாறும் தாங்கள் அவர்களை மனமார வரவேற்பதாகவும் கூறியுள்ளனர்.
சிங்கள மாணவர்கள் இலங்கை இராணுவத்துடனும் புலனாய்வுத்துறையுடனும் மிக நெருக்கமான உறவினை வைத்திருப்பதும் மட்டுமல்லாமல் இந்த கண்டிய நடனத்தினை இராணுவத்தினரே ஒழுங்குபடுத்தினர் என்பதும் தெரியவந்துள்ளது.
சிங்களவர்களை யாழுக்கு வரும்படி வரவேற்கும் சம்பந்தன்,சுமந்திரன் அவர்கள் அதன் விளைவுளை உணர்வார்களா? போர் முடிந்த கையோடு, அவசர அவசரமாக யாழ். பல்கலைக்கழகத்திற்கு இலங்கை அரசும் இராணுவமும் சிங்கள மாணவர்களை கொண்டுவந்தனர். இதன் முக்கிய நோக்கம் யாழ்ப்பாணத்தினை சிங்கள மயமாக்குவதே ஆகும்.
தமிழர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தமிழ்ர்களை தங்கள் நாட்டில் நிரந்தர அடிமையாக்கும் கைங்கரியத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தமிழர் தலைவர்களா? அல்லது சிங்கள நலன் காக்கும் அரசியல் வாதிகளா?
- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு