மற்றுமொரு முன்னாள் போராளி மரணம்!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளின் திடீர் மரணங்கள்தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் மேலும் ஒரு முன்னாள் போராளி திடீரெனகாச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் உயிரி ழந்துள்ளார்.
பூநகரியை சேர்ந்த நடராஜா கலியுகராஜா (54வயது) என்பவரே 7 ம் திகதி காலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில்கடந்த மாதம் 24ம் திகதி இவருக்கு காச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இவரைபூநகரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். பின்னர்அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இருந்த போதிலும் காய்ச்சலின் தீவிர தன்மை காரணமாக அங்கிருந்து 27ம் திகதியாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 7ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் இம் மரணம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் தீடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசரனையை மேற்கொண்டிருந்தமைகுறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இவரது காச்சலின் வகை தொடர்பாகவோ அதன் தீவிர தன்மை தொடர்பாகவோஉறவினர்களுக்கு தெரியப்படுத்தப்படாத நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பான மரண விசாரணைகளை ந.பிரேம்குமார் மேற்கொண்டதன் பின்னர் சடலம்உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila