இனியும் இந்த அரசாங்கத்தை நாம் நம்பினால் எமது இனமே இலங்கையில் இல்லாமல் போகும் நிலைக்கு சென்றுவிடும், விடுதலை கேட்டு போரிட்ட எங்கள் பிள்ளைகளின் இறப்புக்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் அவர்கள் ஆத்மாக்கள் எப்போதும் சாந்தியடையாது என மாவீரர் குடும்பத்தை சேர்ந்த பெண்ணொருவர் உணர்ச்சியுடன் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான வலய செயலணியிடம் தெரிவித்துள்ளார்.
எமக்கான முழுமையாக சர்வதேச நீதிபதிகளை கொண்ட சர்வதேச விசாரணையின் மூலமே கிடைக்கும், உள்நாட்டு நீதித்துறை யில் ஒருதுளி கூட எமக்கு நம்பிக்கையில்லை.
முள்ளிவாய்க்காலில் எம்மை கொத்துக்குண்டு போட்டு அழித்த போதும், எமது பிள்ளைகளை கடத்தி சென்ற போதிலும் கண்திறக்காத இலங்கையின் நீதி, இனிமேலா கண்திறக்க போகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்றையதினம் காலை ஒன்பது மணி முதல் மாலை நான்கு மணிவரை மேற்குறித்த செயலணியின் அமர்வு நடைபெற்றது.
இதன்போதே தமிழீழ விடு தலைப்புலிகள் இயக்கத்திற்கு தனது மகனொருவரை மாவீரனாக அர்ப்பணித்த தாயொருவரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் எமது பிள்ளைகள் இருக்கிறார்களா? இல்லையா? என்று தெரியாமல் இன்றும் தேடி அலை கின்றோம்.
எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும். இதுவே எமது ஒரே கோரிக்கை. எங்கள் பிள்ளைகளே எமது உலகம். அவர்கள் இல்லாமல் பத்து வருடங்கள் கடந்து விட்டன.
நாம் இறக்கும் தறுவாயிலாவது எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் என்று தானே கோரு கின்றோம். எங்களது பிள்ளை தந்துவிட்டால் நாங்கள் உங்களை மன்னித்து விடுகின்றோம்.
இராணுவம் எமது பிள்ளைகளை விசாரணை என்று அழைத்து சென்றார்கள். அழைத்து சென்ற பிள்ளைகளை இராணுவ முகாமில் தடுத்து வைத்திருக்கும் போதும் சென்று பார்வையிட்டிருந்தோம்.
ஆனால் பின்னர் எங்களது பிள்ளைகளை தாம் பிடிக்கவில்லை என்கின்றனர்.
இப்போது காணவில்லை என்கின்றனர். எம் பிள்ளைகளை பிடித்து சென்றவர்களை அடையாளம் காட்டியும் ஏன் அவர்களை விசாரணை செய்யவில்லை?
எங்களது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். அதனை கண்டறிவதற்கு சர்வதேசத்தினால் தான் முடியும் என்றால் அந்த பொறுப்பினை அவர்களிடம் கையளிக்க வேண்டும்.
மாறாக இலங்கை அரசினால் எத்த னையோ ஆணைக்குழுக்கள் நியமிக் கப்பட்ட போதிலும் அவை எல்லாமே எம்மை ஏமாற்றும் செயற்பாடுகளாகவே இருக்கின்றன.
இறுதி போரில் நடைபெற்ற யுத்தத்தில் இலங்கை அர சினால் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் சில ஊடகங் களால் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
ஆனால் இன்றும் எத்த னையோ கொடுமைகள் வெளிவராமல் உள்ளன.
இந்த கொடுமைகள் வெளிவருவதற் கும், இந்த கொடுமைகளை இழைத்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கு வதற்கு சர்வதேச விசாரணை ஒன்றினாலேயே முடியும் என அவர் மேலும் கூறினார்.