இலங்கையிலேயே மிகப்பெரிய மீன்பிடித்துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ளதாக அரசின் அறிவிப்பு வடக்கினில் எஞ்சியுள்ள ஒரேயொரு துறைமுகமான பருத்தித்துறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
அண்மையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கீரிமலைத் துறைமுகத்தில் அரசாங்கம் மீன்பிடித் துறைமுகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்துக்களின் புனித இடமான கீரிமலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. வேறு தரப்பினர் யாராவது எடுத்தார்களா என்பது குறித்தும் எமக்குத் தெரியவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர என்பவர் தெரிவித்துள்ளார்.
வடக்கின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இலங்கையிலேயே மிகப்பெரிய துறைமுகம் ஒன்றை பருத்தித்துறையில் அமைக்கவுள்ளோமென அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 வருடங்களிற்கு மேலாக படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த பருத்தித்துறை துறைமுகம் அண்மையினிலேயே விடுவிக்கப்பட்டிருந்த நிலையினில் தற்போது தென்னிலங்கையினிலிருந்து படையெடுத்துள்ள மீனவாகளது பயன்பாட்டினில் படையினரது கண்காணிப்பினில் இத்துறைமுகம் உள்ளது.அது அபிவிருத்தி செய்யப்பட்டாலும் தற்போது போன்றே உள்ளுர் மீனவர்களால் பயன்படுத்தப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.