தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 8ஆம் திகதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட கணேசன் நிமலரூபனின் 4ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு அரசியல் கைதிகளின் குடும்பத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு வெலிக்கடைச் சிறைச்சாலை முன்பாக போராட்டம் ஒன்றை நடாத்தப்போவதாக அந்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை முத்து சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்த அரசியல் கைதிகள் கடந்த ஜனவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், ஏழு மாதங்கள் கடந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila