இன ஐக்கியத்தை ஏற்படுத்த முன்னர் அதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்: சி.வி

நாட்டின் சகல தரப்பினரிடமும் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர் அதற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய பிரதிநிதியிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த மத்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு யாழ்ப்பாணம் வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சமாதானத்திற்கான பிரதிநிதி ஜோடி கரஸ்கோ முனோஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். கைதடியிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தின் பின்னரும் இலங்கையிலுள்ள சகல இனத்தவரிடமும் சமாதானம் மற்றும் ஐக்கியத்தை ஏற்படுத்த மத்திய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த ஐரோப்பிய பிரதிநி முதலமைச்சரிடம் கேட்டறிந்தார். குறிப்பாக அரசியல் யாப்பினூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது தொடர்பிலும் அவ்வாறான செயற்பாடுகளிற்கு சர்வதேசத்தின் சார்பில் எவ்வாறான பங்களிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றது என்பது தொடர்பிலும் அவர் கலந்துரையாடினார் என முதலமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila