அனுராதபுரச் சிறையின்கீழ் நிலத்தில் கிடங்குவெட்டி அதற்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை எனது கண்களால் கண்டேன் என தாயொருவர் சாட்சியமளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நல்லிணக்கச் செயலணியின் கருத்தமர்விலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், 1996ஆம் ஆண்டு எனது மகன் இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டார்.
பின்னர் எனது மகன் அனுராதபுர சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிந்தவர் ஒருவர் மூலமாகத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நான் அனுராதபுர சிறைச்சாலைக்குச் சென்றபோது சிறைச்சாலையின் கீழ் நிலத்தில் கிடங்கு வெட்டப்பட்டு அதற்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்ததை எனது கண்ணால் கண்டேன்.
எனவே அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் மீட்கப்படவேண்டுமெனவும், இரகசிய வதை முகாம்கள் தொடர்பான தகவலை வெளியிடவேண்டுமெனவும் தெரிவித்தார்.