வட்டுக்கோட்டை தீர்மானத்தை இப்போது வலியுறுத்தவில்லை, பன்னாட்டு விசாரணையை நாங்கள் கோரவில்லை என்றவாறு சம்பந்தர் ஐயா கருத்துக்களை கூற மறுபுறம் மாவீரர்கள் நாளை மாற்றவேண்டும் என்று மாவை சேனாதிராசா கூறுகின்றார் என்றால் இவர்கள் யாரை திருப்திப்படுத்த முயல்கின்றார்கள்? என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்
அண்மையில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மு.திருநாவுக்கரசின் இலங்கை அரசியல் யாப்பு தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.