உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர் தமிழ் அரசியல் கைதிகள்

Tamil-Political-Prisoners-

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் இன்று(திங்கட்கிழமை) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அனுராதபுரம் மற்றும் கொழும்பு மகசீன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 99 பேரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியே இவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று(திங்கட்கிழமை) காலை யாழ்ப்பாணம், கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila