2009 இறுதிப் போரின் போது சரண்டைந்த போராளிகள் தொடர்ச்சியாக மர்ம மரணங்கள் மூலமும் சாவை சந்தித்து வருகின்றனர்.
சரணடைந்த போது அவர்களுக்கு பரிசோதனை என்ற பெயரிலும்,வலுக்கட்டாயமாகவும் சில வருடங்கள் கழித்து உயிர் போகும்படி சிங்கள அரசால் விச ஊசிகள் போடப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் வலுக்கின்றது. கடந்த சில மாதங்களில் மட்டும் கணிசமான விடுதலைப் புலிகள் மர்ம்மான முறையில் உயிரிழந்துள்ளனர்.இத்தகைய சிங்கள அரசின் இந்த மனித குல விரோத போக்கை கண்டித்தும்,
நடந்த மரணங்களுக்கு உரிய விசாரணை கோரியும்,
சரணடைந்த மீதமுள்ள போராளிகளுக்கு உரிய சர்வதேச மருத்துவ பரிசோதனையை நடத்தக்கோரியும்,
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை போராட்டம் நாளை 6/8/2016 காலை 10 மணிக்கு நடை பெற உள்ளது.