பல ஆணைக்குழுக்களிடம் எனது கணவரை காணவில்லை என்று தகவல் வழங்கியும் எந்தவித பதிலும் இதுவரை இல்லை.
இதனால் தற்போது ஆணைக் குழுக்களிடம் மீண்டும் சென்று தகவல்களை வழங்குவதற்கு விரும்பம் இல்லை என கணவன் காணாமல் போனாதாக சாட்சியமளிக்க வந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வு வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அங்கு கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
எனது கணவரின் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்றார்கள், அவரை கடத்தியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
பல ஆணைக்குழுக்களிடமும் எனது கணவரை காணவில்லை என்று தகவல் வழங்கியும் எந்த விதமான விசாரணையையும் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.