அத்துடன் பல வருடங்களாக நிலுவையில் உள்ள இந்த கடத்தல் விவகாரம் தொடர்பிலான வழக்கில் உடன் தலையீடு செய்யுமாறும், மன்றுக்கு உதவியாக சிரேஷ்ட அரச சட்ட வாதி ஒருவரை வழக்கு விசாரணைகளின் போது மன்றில் ஆஜராக்குமாறும், சட்ட மா அதிபருக்கு நீதிமன்ற பதிவாளர் ஊடாக நேற்று இரண்டாவது முறையாகவும் நீதிவான் அறிவித்தல் விடுத்தார். இரண்டாவது அறிவித்தலையும் சட்ட மா அதிபர் கணக்கில் கொள்ளாது செயற்படின் தான் தொலைபேசியூடாக நேரடியாக சட்ட மா அதிபரை தொடர்புகொள்ள வேண்டி வரும் எனவும் நீதிவான் லங்கா ஜயரத்ன எச்சரித்தார். |
திருகோணமலை கடற்படை வதைக்கூடத்தை குற்றப்பிரதேசமாக நீதிமன்றம் அறிவிப்பு!
Add Comments