நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்த இடத்திலும் முகாம் அமைப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமையவே, கடற்படை முகாம் அமைப்பதற்கு முள்ளிவாய்க்கால் வட்டுவாகலில் காணி சுவீகரிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் வட்டுவாகலில் இடம்பெறவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கையானது, பிரதேச மக்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பால் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளிக்கும்போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசிற்கே உண்டு எனும் ரீதியில், அதனை கருத்திற்கொண்டே வட்டுவாகல் பிரதேசத்தில் காணி சுவீகரிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். எவ்வாறெனினும், இதுகுறித்து தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும், அரசாங்க அதிபரின் அறிக்கை கிடைத்ததும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.
வட்டுவாகல் காணி சுவீகரிப்பு நடவடிக்கை : நியாயம் கற்பிக்கின்றது அரசாங்கம்!

Add Comments