
சமீபத்தில் உலகத்தினையே அதிர வைத்த செய்தி முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கையின் போது விஷம் கலந்த உணவுகளும், மருந்துகளும் வழங்கப்பட்டமையே ஆகும்.
கடந்த காலத்தில் அரசாங்கத்தால் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு பதினோராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களுள் சிலர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். அதிலும் புற்று நோய் காரணமாகவே உயிரிழப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதனால் மிகுந்த அச்சத்தில் வாழும் துர்பாக்கிய நிலைக்கு முன்னாள் போராளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் அச்சத்தை போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனைவருக்கும் தகுந்த தரம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளிற்கு இவ்வாறான மரண பயம் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அதனால் இவர்களது எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
ஆகவே இவர்களுடைய அச்சத்தை போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனைவருக்கும் தகுத்த தரம் வாய்ந்த மருத்துப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.