இதன் காரணமாக புதுமாத்தளன், அம்பலவன், பொக்கனை, வலைஞர்மடம் இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கல், ஆகிய பகுதிகள் குண்டுச் சத்தங்களால் அதிர்ந்தன.
பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதிக்கு அருகே நிலை கொண்டுள்ள HDU.SLA இராணுவப் படையணியே மேற்படி அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதி உச்சகட்ட போர் நடவடிக்கை நடைபெற்ற குறித்த இடங்களில் வெடிக்காத நிலையில் அதிகமான வெடிபொருட்கள் இருப்பாதல் சிறப்பு நடவடிக்கையில் தாம் ஈடுபடுவதற்காக குறித்த இடத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் தமது தேடுதலில் மீட்கப்பட்ட வெடிபொருட்களை மிகவும் பாதுகாப்பாக தாக்கி அழிக்கும் நடவடிக்கையை இன்று மேற்கொண்டுள்ளதாகவும் HDU.SLA இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்று காலை 6.00 மணியில் இருந்து 12.00 மணிவரைக்கும் அப்பகுதிகளில் பொது மக்களின் நடமாட்டம் இருக்கின்றதா? என்று ஆராய்ந்தோம். பின்னர் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் அதிஉயர் வெடிபொருட்களாக காணப்பட்டதால் கட்டம் கட்டமாக தகர்த்து அழித்துள்ளதாகவும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக விசேடமாக இராணுவத்தினரை நிலைகொள்ளச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2009இல் இறுதிகட்ட போரின் போது பொதுமக்கள் இல்லாத குறித்த ஆனந்தபுரப் பகுதியில் குறைந்தது 48 மணிநேரம் விடுதலைப்புலிகளும் இராணுவ விசேட அணியினரும் அதிஉச்ச ஆயுத பலத்தை பயன்படுத்தி போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளும் இராணுவ உயர்தளபதிகளும் இச்சமர்க்களத்திலே உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.