பிரித்தானியாவில் வசிக்கும் சிறுவர்களை திருப்பி அனுப்புவது தொடர்பில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு!!

பிரித்தானியாவில் புதிய விசா கட்டணங்கள் அறிமுகம்! ஆறாம் திகதி முதல் அமுல்

அண்மையில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் பிரித்தானியாவில் வசிக்கும் சிறார்களை திருப்பி அனுப்புவது தொடர்பில் பெற்றோரின் குடிவரவு வரலாறு (Immigration History) கருத்திற்கொள்ளப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
AM (Pakistan) v Secretary of State for the Home Department [2017] EWCA Civ 180 எனும் வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலே குறிப்பிட்டவாறு வித்தியாசமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

பிரித்தானியாவில் சிறுவர்கள் தொடர்ந்தும் 7 வருடத்திற்கு மேல் வசித்தால், எதிர்மறையான காரணிகள் இல்லாதபட்சத்தில் அவர்களை நாட்டிலிருந்து திருப்பி அனுப்பக்கூடாது எனும் விதிமுறை பிரித்தானிய குடிவரவுச் சட்டத்தில் உள்ளது.
இந்த விதிமுறையை டிசம்பர் 2008 இல் உள்விவகார அமைச்சு அகற்றிவிட்டு, மீண்டும் 2012இல் யூலையில் இதனை அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்த விதிமுறையில் பின்வரும் விடயங்கள் முக்கியமான அம்சங்கள்....

  • சிறுவர் (Child) 18 வயதுக்கு குறைந்தவராக இருக்கவேண்டும்.
  • சிறுவர் யுகேயில் வசிக்கவேண்டும்
  • சிறுவர் குறைந்தது தொடர்ந்தும் 7 வருடங்கள் வசித்திருக்க வேண்டும் (ஏதாவது காலங்கள் சிறையில் இருந்திருந்தால் அதை தவிர்த்து) மற்றும் அந்தச் சிறுவர் பிரித்தானியாவை விட்டு திரும்பிச் செல்லும்படி எதிர்பார்ப்பது நியாயமான விடயமாக இருக்கமாட்டாது.

மேலும் உள்விவகார அமைச்சு Section 55 of the Borders, Citizenship and Immigration Act 2009 இன் கீழ், சிறாரின் சிறந்த நலனின் அடிப்படையில் (best interests of the children) இந்த தீர்மானங்களுக்கு முடிவெடுக்கவேண்டும்.
இருப்பினும், மேற்குறிப்பிட்ட இந்த வழக்கு ஏழு வருடங்களுக்கு மேலாக யுகேயில் வசித்த இரண்டு சிறார்களைக் கொண்ட ஒரு பாகிஸ்தானியக் குடும்பத்தை உள்ளடக்கியது.
அவர்களுக்கு இந்த நாட்டில் வசிப்பதற்கு அனுமதி கிடையாது. அவர்கள் மேற்குறிப்பிட்ட 7 வருட விதிமுறையின் கீழ் தங்குவதற்கு விண்ணப்பித்திருந்தார்கள்.
இந்த விண்ணப்பத்தை உள்விவகாரத் திணைக்களம் நிராகரித்திருந்தது. அதனை எதிர்த்து First-Tier Tribunal இலில் மேன்முறையீடு செய்திருந்தது.
ஆனால் நீதிபதி அந்த விண்ணப்பத்தை, அவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்று தங்களுடைய சொந்தங்களுடன் இணையலாம் என்று நிராகரித்து விட்டார்.
அதில் குறிப்பாக இந்தச் சிறார்களுடைய பெற்றோர் குடிவரவு சட்ட விதிகளை முற்றாக அலட்சியம் செய்து விட்டார்கள் என்ற காரணத்தையும் முக்கியமாக குறிப்பிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து குடும்பம் Upper Tribunalக்கு விண்ணப்பம் மேற்கொண்டிருந்தது.
அதை விசாரித்த நீதிபதி முதல் நீதிமன்றின் முடிவுக்கு உடன்படாமல், சிறார்களை திருப்பி அனுப்புவது நியாயமா என்ற சோதனை (Reasonable Test) சிறார்கள் பற்றிய தனிப்பட்ட கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்து வழக்கை அனுமதித்திருந்தார்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

உள்விவகாரத் திணைக்களம் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.
இந்த வழக்கு 16 மார்ச் 2017 அன்று மேன் முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது.
இந்த வழக்கை விசாரித்த மூத்த நீதிபதிகள், முதலாவது நீதிமன்றின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதுடன், நியாயமான சோதனை (Reasonable Test) உள்விவகாரத் திணைக்களத்தில் முடிவெடுப்பவர்களை பரந்த பொதுநலன் அடிப்படையில் முடிவெடுக்க அனுமதிக்கின்றது என்று தெரிவித்திருந்தார்கள்.
ஆகவே இந்த விதிமுறையின் கீழ் விண்ணப்பம் மேற்கொள்ள இருப்பவர்கள், குடிவரவு விதிகளை முடிந்தளவு மீறாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்.
எடுத்துக்காட்டாக தற்காலிக வதிவுரிமைக்குரிய நிபந்தனைகளை பின்பற்றுவதும் அவசியமாகும்.
இதேவேளை அரசியல் தஞ்சம் நிராகரித்த பின்னர் தொடர்ந்து இந்த நாட்டில் இருப்பதற்குரிய காரணங்களை உள்விவகாரத் திணைக்களத்திற்கு விளக்குவதும் உகந்ததாக இருக்கும்.
தகவல் -Jay Visva Solicitors
தொடர்புகளுக்காக 0208 573 6673.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila