முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் நினைவேந்தல் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் கூறினர். “ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்குகள் வடமாகாணத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் 12ம் திகதி ஆரம்பமாகிறது. 12ம் திகதி, நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் சுமார் 600 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்ட செம்மணி மண்ணில் தொடங்கி வைக்கப்படும். தொடர்ந்து 13ம் திகதி கிழக்கு மாகாணத்திலும், 14ம் திகதி நவாலி சென்.பீற்றர் தேவாலயத்திலும், 15ம் திகதி குமுதினி படுகொலை நடந்த நெடுந்தீவிலும், 16ம் திகதி 17ம் திகதிகளில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும். 18ம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும்” என அவர்கள் மேலும் தெரிவித்தனர். |
Home
» Flash News
» முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே 12ஆம் திகதி ஆரம்பம்! - வடக்கு, கிழக்கில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே 12ஆம் திகதி ஆரம்பம்! - வடக்கு, கிழக்கில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடு
Posted by : srifm on Flash News On 02:44:00
Add Comments