"சி"னாக்களும் "த"னாக்களும் இதோ ஒரு சிறப்பு நாடகம்


பாத்திரங்கள்: முகத்தைச் சுற்றி கறுப்பு துணியால் கட்டியவர்கள், அரசியல்வாதிகள், சீருடையினர், பொதுமக்கள்.

அரங்கு: ஒரு பெரும் மேடை, ஏகப்பட்ட மக்கள் கூட்டம்.
முகத்தைச் சுற்றி கறுப்புத் துணி கட்டியவர்கள் கூட்டமாக கவிழ்ப்போம்... கவிழ்ப்போம்... ஆட்சியைக் கவிழ்ப்போம்...
(இப்படிச் சொல்லியவாறு ஓடுகின்றனர்)

பொதுமக்கள்: என்ன நடக்குது? இங்க என்ன நடக்குது?

குரல் 1: ஆட்சியிழந்த மன்னரின் வாரிசுகள்தான் அவை மீண்டும் அரியணை ஏற எத்தனிக்கும் கொக்கரிப்பின் குரலோசை அது.

பொதுமக்கள்: ஏன் இப்பவொரு ஆட்சி நடக்குதுதானே! பிறகேன் கவிழ்ப்பாம்.

குரல் 1: செய்த குற்றத்தை மறைத்து மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றிவிட்ட நன்றிக் கடன்தான் அதுவாம்.

த.மக்கள்: ஓமாம். நாங்கள் வாக்களித்து ஐயாவை நாற்காலியில் இருத்திவிட, அவர் மின்சார நாற்காலியில் இருக்க வேண்டிய வரைக் காப்பாற்றிப் போட்டாராமோ!

குரல் 2: ‘சி’ மக்கள் அவரை விரும்புகின்றனர். காலிமுகத்திடலில் அது நிரூபணமாகியுள்ளது.

த.மக்கள்: அப்ப எங்கட ஐயாவின்ர எதிர்க் கட்சி ஆசனம் அவுட்டாகுமோ!

குரல் 3: அந்தச் சீமான் வந்தால் ஆசனம் என்ன ஆமோ...

த.மக்கள்: விடமாட்டோம்; விடமாட்டோம் அவர் எங்கள் தலைவர். எங்களுக்காக அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்க்கும் தலைவர். படையினரைச் சந்தித்து காணியை விடுவிக்க வியூகம் அமைத்த பெருமகனார். அவருக்கே அந்த ஆசனம்.

குரல் 4: விடமாட்டோம் என்கிறீர்களே என்ன செய்வியள்?

த.மக்கள்: எங்கள் உயர்ந்த ஐயா சொன்னவர் அல்லோ, சர்வதேசத்துடன் சேர்ந்து எங்கட பிரச்சினைக்குத் தீர்வு காண்பம் என்று.

குரல்: அடக்கடவுளே! நீங்கள் இன்னும் திருந்தல்லபோல ஏமாற்றம் என்ற சொல்லே உங்களுக்குத் தெரியாது போலும்.

குரல் 5: ஆஹா... ஆஹா...  கடுமையாக உணர்ச்சி வசப்பட்டு எதைச் சொன்னாலும் எங்கள் மக்கள் நம்புவர். (அரங்கு மாறுகிறது)
கவிழ்ப்போம் கவிழ்ப்போம்
யாரைக் கவிழ்ப்பது இப்பவே கவிழ்த்த மாதிரித்தானே.

பிரதமர்: விடமாட்டோம் விடமாட்டோம் நாங் கள்தான் கவிழ்ப்பம்.

குரல் 6: எப்படிக் கவிழ்ப்பியள். அந்தாளின் மே தினத்தில் எவ்வளவு இலட்சம் ‘சி’னாக்கள்.
பிரதமர்: போரில் அழிந்து புழுதி பிரண்டு வாழும் இடம் இல்லாமல் திரியும் ‘த’னாக்களையே காலஅவகாசத்தால் கட்டிப்போட்டவர்கள் நாங்கள். 

எதிர்க்கட்சியில் இருக்க வேண்டியவர்களை தவிர்த்து சாமுக்கு அக்கதிரை கொடுத்தவர்கள்  நாங்கள். எங்களை எப்படிக் கவிழ்க்க முடியும்.

குரல் 7: அப்ப மீண்டும் மின்சார நாற்காலியை கொண்டு வருவியளோ.

பிரதமர்: சீ... சீ... நடக்காத சர்வதேச விசாரணையையே நடந்து விட்டதாக அவர்கள் மூலம் கூறவைத்தவர்கள் நாங்கள். என்னோடு  போட்டியிடும் அந்த வீரன் யார் என்று கேட்டவரின் பின்னால் நின்றவரையே வீரராக்கிக் காட்டியவர்கள் நாங்கள்.

கவிழ்ப்போம் கவிழ்ப்போம் ‘த’னாக்களைக் கவிழ்ப்போம்.
ஜனா. பிரதம. ஒத்துழைப்போம்; ஒத்துழைப்போம்.

குரல் 7: இவையயல்லாம் ஒன்றொன்றாகி ‘த’னாக்களை அழிக்கவே இவையெல்லாம் ஒன்றொன்றாகி (திரை மூடுகிறது)

‘த’னாக்கள் திகைக்கின்றனர். ‘த’ அரசியல் தலைமை கரகோசம் செய்கிறது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila