இந்த ஆலயத்திற்கு நாகர் இனத்தவர் வாழந்ததன் காரணமாகவே நாகர் கோவில் எனும் பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.
அத்துடன் நாகர் இனத்தவர் நாகர் வணக்கத்தை உடையவர்களாகவும், தமது தலைவனை ‘தம்பிரான்’ என அழைக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தமையே பின்னாளில் இவ்வாலயத்திற்கு நாக தம்பிரான் ஆலயம் என பெயர் வர காரணமானதாக கூறப்படுகிறது.
இதேவேளை இந்த ஆலயத்திற்கான வழிபாடு தோன்றிய காலம் ஆதார பூர்வமாக கூறப்படாத போதிலும் மக்களினால் பேசப்படும் கர்ண பரம்பரைக் கதைகள் மூலம் இப்பகுதியில் நாகர் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆலயம் தொடர்பான மேலதிக வரலாற்றை கீழே உள்ள காணொளியில் காணலாம்.