கேப்பாப்பிலவு முகாமுக்குள் மக்களை அடைத்து வாயிலை இராணுவம் மூடியதால் பதற்றம்!

கேப்பாபிலவில், இராணுவத்தினர் வசமுள்ள, காணிக்குள் வழிபாட்டுக்குச் சென்ற மக்களை வைத்து இராணுவத்தினர் பிரதான நுழைவாயிலை மூடியதால் பதற்றம் ஏற்பட்டது. கேப்பாபிலவு பிரதான வீதி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்துக்காக இன்று இராணுவத்தினரால் திறந்து விடப்பட்டது. தமது காணிகளை பார்த்து கதறியழுதவண்ணம் மக்கள் ஆலயத்திற்கு சென்றனர்.

பின்னர் ஆலயத்தை விட்டு மக்கள் வெளியே வரமுடியாதவாறு இராணுவத்தினர் நுழைவாயிலை மூடினர். இதனால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. அங்கு வருகை தந்த மாவட்ட செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைய, நுழைவாயிலை திறந்து மக்கள் வெளியேற இராணுவம் அனுமதித்தது. இதனால் குறித்த பிரதேசத்தில் நிலவி வந்த பதற்றமான சூழல் தணிந்துள்ளது. மக்கள் வெளியேறியதையடுத்து, இன்று காலை திறக்கப்பட்ட வீதியின் பிரதான வாயில் கதவை இராணுவத்தினர் மீண்டும் மூடியுள்ளனர்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila