நல்லாட்சியிலுள்ள பிரமுகர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதார நிலங்களை மகாவலி வலயம் என்ற பெயரில் குடும்ப சொத்தாக்கிக்கொண்டிருக்கின்றமையினை பற்றி தமிழ் தலைமைகள் வாய் திறக்க ஏன் மறுக்கின்றார்களென கொக்கிளாய் கிராம அபிவிருத்தி அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
1983 , 1988ஆகிய காலப்பகுதிகளிலும் பின்னர் 2007லும் என மூன்று தடவைகள் வர்த்தகமானி அறிவித்தலின் மூலம் மகாவலி அதிகார சபையின்கீழ் மண்கிண்டிமலை தொடக்கம் கோட்டைக்கேணிப் பிள்ளையார் ஆலயம் வரையிலான பிரதேசங்கள் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் மகாவலி அதிகார சபையின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளினில் தற்போதைய அரசிலும் அமைச்சராக உள்ள நிமால் சிறிபால டி சில்வா அதனை தலா 25 ஏக்கர் நிலம் வீதம் பிரிக்கப்பட்டு குத்தகை அடிப்படையிலே சிங்கள மக்களிற்கு தெங்கு பயிர்ச் செய்கைக்கு என வழங்கியுள்ளார்.
அத்துடன் தனக்கு 25 ஏக்கர் நிலமும்; உடன் பிறந்த சகோதரிக்கு 2 காணிகள் என்ற அடிப்படையில் 50 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று அவரின் மாமன் , சித்தப்பன் , பெரியப்பன் என்றெல்லாம் உறவினருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளிற்கருகாகவுள்ள் தமிழ் மக்களின் வாழ்வாதார நிலமாக எஞ்சியுள்ள 600 ஏக்கரையும் கையகப்படுத்துவதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றது . அதற்காகன முயற்சிகள் இடம்பெறும் அதேநேரம் அக்காணிகளிற்குச் செல்லும் பாதைகளை இந்த அமைச்சரின் சகோதரி கையகப்படுத்தி தடுப்பு வேலியினை அமைத்து விட்டதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
Add Comments