மனவருத்தத்துடன் தீர்ப்பிடுகிறேன்: முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய போது நீதிபதி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன் என்பவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கிளிநொச்சியை சேர்ந்த பெண் ஒருவர் தனது பிள்ளையை புலிகள் அமைப்பில் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டதாக தெரிவித்து இவர் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில், ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இதன் போது, தான் மனவருத்தத்துடன் தீர்ப்பளிப்பதாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila