20வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்ப ட்டுள்ள அடிப்படை உரிமை வழக் கிலும் அரசாங்கத்தின் நிலைப்பாட் டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட லாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள பொதுமக்கள் கருத்துக் கணிப்பொன்றை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிடலாம் என்று கூறப்படுகின்றது.
அதே நேரம் எதிர்வரும் 20-ம் திகதி நாடாளுமன்றத்தில் குறித்த சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பின் போது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்த்து வாக்களிக்க லாம் என்ற அச்சமும் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் 20வது திருத்தச் சட்டம் வாக் கெடுப்பில் தோற்றாலோ அல்லது உச்சநீதி மன்றம் பொதுமக்கள் கருத்துக் கணிப்புக்கு உத்தரவிட்டாலோ அவற்றைத் தவிர்த்து அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தல்களை ஒரே நாளில் நடத்த கபே அமைப்பு மாற்று வழியொன்றை பிரேரித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 2-ம் திகதிக்கு முன்னதாக அனைத்து மாகாணங்களின தும் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்க ளின் இணக்கப்பாட்டைப் பெற்று அனைத்து மாகாண சபைகளினதும் பதவிக்காலத்தை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டுவருமாறு கபே அமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது.
அதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மாகாணங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுடன் பேச்சுவார்த்தை மேற் கொள்ள வேண்டும் என்றும் கபே கோரி க்கை விடுத்துள்ளது.
அதன் மூலம் சகல மாகாணங்களுக்கு மான தேர்தல்களை ஒரே நாளில் நடத்தும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் கபே அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மாகாண சபைகளின் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதன் மூலமாக அரசவளங்கள், பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் அரச பணியாளர்களின் காலவிரயத்தைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்று கபே அமைப்பு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.