இந்திய தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தியை விநாயக் கோட்சே என்பான் சுட்டுக் கொல்கிறான்.
அந்தோ! அகிம்சாமூர்த்தி இறந்து போகி றார். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயிடம் ஏதேனும் கொள்கை இருந்ததாகத் தெரியவில்லை.
இதுபோன்றுதான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கனும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஏழை வீட்டுச் சிறுவன் ஆபிரகாம் லிங்கனி டம் இருந்து இந்த உலகம் நேர்மையைக் கற் றுக் கொண்டது.
அவரின் நேர்மையும் கடின உழைப்பும் அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற பதவியை அவருக்கு இறைவன் வழங்கினான்.
ஆக, இந்த உலகம் நீதி, நேர்மை, தர்மம் என்பவற்றையே எக்காலத்திலும் போற்றிக் கொள்ளும்.
ஆம், நடைமுறை வாழ்வில் தமிழக நடிகர் நம்பியார் மிகவும் நல்லவர். ஐயப்ப பக்தன். எம்.ஜி.இராமச்சந்திரனின் படங்களில் வில் லன் பாத்திரத்தை நம்பியாரே எடுத்துக் கொண் டார்.
எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் மக்கள் மத் தியில் பெரும் செல்வாக்குப் பெறுவதற்கு நம்பி யாரின் நடிப்புத் திறனே காரணம் எனலாம்.
இருந்தும், நம்பியார் எடுத்துக் கொண்ட பாத்திரம் அதர்மமானது, அநீதி செய்வது, ஏழை மக்களை வருத்துவது என்பதாக இருந் தது.
அதேவேளை அவற்றையயல்லாம் முறி யடித்து தர்மத்தை - நீதியை நிலைநாட்டி ஏழை மக்களை வாழ்விப்பதான பாத்திரம் எம்.ஜி. ஆருக்காயிற்று.
எம்.ஜி.ஆரும் நம்பியாரும் நடிகர்கள். இருவரும் தனி மனித வாழ்வில் நல்லவர்கள். எம்.ஜி.ஆரை விட நம்பியார் ஒருபடி மேலாக இறைநம்பிக்கை கொண்டவர்.
இருந்தும் அவர் எடுத்த பாத்திரம் மக் களுக்கு வெறுப்பானது. எந்தப் பாத்திரத்தை எடுத்து அதுவாகவே நடிக்கும் போது, மக்கள் மனங்களில் ஒரு பதிவு ஏற்படுகிறது.
அந்தப் பதிவு எம்.ஜி.ஆரை ஏற்றும் நம்பி யாரை நிராகரித்தும் வாழ்வதான மக்கள் நீதியை உருவாக்குகிறது. இதுபோன்றுதான் எல்லாமும்.
எனவே எதிர்மறையான - மக்களுக்கு விருப்பமற்ற செயல்களில் யார் இறங்கினாலும் மக்கள் அதனை ஒருபோதும் ஏற்கமாட்டார் கள் என்பதைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகும்.
காந்தியின் நாமம் இருக்கும்வரை கோட்சே யின் நாமமும் இருக்கும் என்பது ஒரு தகவலே யன்றி, அதன் பக்கங்கள் மாறுபட்டவையல்ல.
ஆம், கோட்சே எப்போதும் கொடியவனா கவே காட்சி தருவான். அந்தக் காட்சியை எந்த யுகத்திலும் கோட்சே நாமம் தவிர்த்துவிடாது என்பதால்,
எதிர்மறைகள் புறநடைகள் தொடர்பில் நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
எதிர்மறை - புறநடைகள் பற்றி நாம் கரு சனை கொண்டால் அதுவே அவர்களுக்கு விளம்பரமாகிவிடும்.
எனவே அவற்றை அப்படியே பேசாமல் விட்டுவிடுவதுதான் ஒரேவழி.