20க்கு மூன்றிலிரண்டும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம்;உச்சநீதிமன்றம் !

20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மற்றும் பொது மக்கள் கருத்துக் கணிப்புடன் நிறை வேற்றப்பட வேண்டுமென உச்ச நீதிம ன்றம் விவரித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டுவ ரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தே ர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அரச மட்ட அறிக்கை விடுத்துள்ளது.

20ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் கோரப்ப ட்டமைக்கமைய இன்றைய தினம் கூடிய நாடாளுமன்றத்தில் உச்ச நீதி மன்றத்தினால் அனுப்பி வைக்கப்ப ட்ட வியாக்கியானத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இவ்வேளை உரையாற்றிய சபாநாயகர், 20 ஆவது திருத்தத்திற்காக முன்மொழியப்பட்ட திருத்தங்களில் சில, அரசியல மைப்புக்கு முரணாக உள்ளதென உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பதாக சபைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த திருத்தத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் செயற்படுத்த வேண்டுமென தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வேளை 20ஆவது திருத்தச் சட்டம் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை தொடர்வது தொடர்பான இழுபறி நீடிக்கின்ற நிலையில் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பதற்கான நிலைப்பாடு காண்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலை தொடர்ந்து ஒத்திவைப்பதாகாது மக்களின் ஜனநாயக உரிமையை பறித்தெடுப்பதற்கு சமமாகுமென குறிப்பிட்டு நல்லாட்சி அரசாங்கம் மீது தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்களும், அரச சார்பற்ற அமைப்புக்களும் கடும் விசனத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

மேலும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தும்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பில் பலமுறை ஆர்ப்பா ட்டங்களையும் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila