இணைப்பு 3- லண்டன் நிலக் கீழ் புகையிரத நிலைய தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது


நேற்றுக்காலை  காலை லண்டனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள  பார்சன் கிறீன் நிலக் கீழ்   (parsons green under ground tube station )  புகையிரத நிலையத்தில்   நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்   சம்பவத்துக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இது தொடர்பான தகவலை ஐஎஸ் இயக்கம் தமது  உத்தியோகபூர்வ  இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்தத்தாக்குதலில்  22 பயணிகள்; காயமடைந்துள்ளனர் என லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இணைப்பு 2- இன்று லண்டனில் இடம்பெற்ற தாக்குதல் ஒரு பயங்கரவாதத் தாக்குதல்  –  18 பேர் காயம்
Sep 15, 2017 @ 10:41
இன்று காலை லண்டனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள  பார்சன் கிறீன் நிலக் கீழ் ( parsons green under ground tube station ) புகையிரத நிலையத்தில்   நடத்தப்பட்ட தாக்குதலை பயங்கரவாதத் தாக்குதலாக ஸ்கொட்லண்ட் யார்ட் அறிவித்துள்ளது.
குறித்த தாக்குதல்  காரணமாக காயமடைந்த 18 பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரதநிலையத்தில்  வைக்கப்படிருந்த வாளியில் எவ்வாறு   தீ   ஏற்படுத்தப்பட்டது என்பது குறித்த  தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில்  நிலக் கீழ்  புகையிரத நிலையத்தில் குண்டுத் தாக்குதல்
Sep 15, 2017 @ 09:04
லண்டனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள  பார்சன் கிறீன் நிலக் கீழ் ( parsons green under ground tube station   ) புகையிரத நிலையத்தில் குண்டுத் தாக்குதல் ஒன்று  இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பயணிகள் சிலர் காயமுற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த தாக்குதலையடுத்து  டிஸ்ரிக் லைன் ( Distric line   நிலக் கீழ்  புகையிரத நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.  அத்துடன் தற்போது     பார்சன் கிறீன் நிலக் கீழ் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று  காலை 8.20 அளவில் இடம்பெற்ற இத் தாக்குதலில் பயணிகள் சிலர் காயமுற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத்தின் உள்ளே இருந்த பை ஒன்றே வெடித்ததாக  செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
குண்டுவெடிப்பு சத்தத்தினைக் கேட்டதும் அச்சடைந்த பயணிகள்   தப்பிக்க முயன்ற வேளை ஏற்பட்ட நெரிசலாலே        சிலர்    காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்  குறித்த பகுதியில்  காவல் படையினரும் தீயணைப்புப் படையினரும்   இணைந்து  பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila