வடக்கு மாகாணத்தின் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் விவசாயக் கண்காட்சி திருநெல்வேலி விவசாயப் பாடசாலை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய தினம் ஆரம்பமான இக்கண் காட்சியில் பயனுள்ள நிறைய வளங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாற்றுக்கள் மற்றும் விதை இனங்களின் விற்பனையும் நடந்தேறுகின்றது.
நிறைந்த மனித உழைப்பில் ஏற்பாடு செய்யப் பட்ட இவ்விவசாயக் கண்காட்சியை அனை வரும் பார்த்து பயன்பெற வேண்டும் என்பது நம் பேரவா.
அதேநேரம் விவசாயப் பூமியாக இருந்த எங்கள் வடபுலம் இன்று வர்த்தகப் பூமியாக மாறி வருகிறது.
விவசாயத்துறையில் இருந்த மனித வளம் ஏனைய துறைகளை நோக்கிய பாய்ச்சல் இடம்பெறுவது உணரப்படுகிறது.
இதன்காரணமாக எங்கள் உணவுப் பொருட்களான விவசாய உற்பத்திகள் அளவுக்கதிக மான உரப்பாவனை, கிருமிநாசினிப் பயன்பாடு என்பவற்றில் உற்பத்தி செய்யப்பட, அதை உண்டு நாங்களும் எங்கள் சந்ததியும் நோய் க்கு ஆளாகும் பரிதாபத்துக்குட்பட்டுள்ளோம்.
முன்பெல்லாம் எங்கள் வயலில் விளைந்த நெல்லை குத்தி அரிசியாக்கி உண்பதுதான் வழக்கம்.
மொட்டக்கறுப்பன், பச்சைப்பெருமாள் அரிசி க்கு நிகர் உண்டோ என்று நம்மவர்கள் கேட் பார்கள்.
எங்கள் வயல், எங்கள் தோட்டம் இவை தான் எங்களுக்கான உணவைத் தந்தன.
அரச உத்தியோகம் பார்க்கும் அனைவரும் ஆகக்குறைந்தது வயல் செய்து வீட்டில் மூடைக் கணக்கில் நெல் வைத்திருப்பர்.
ஆனால் இன்று இவையயல்லாம் இழந்து போயிற்று. அரச உத்தியோகத்துக்கு வேளா ண்மை சென்மத்து பகை போல வந்துவிட்டது. வீட்டுத்தோட்டம் நாகரிகமற்றுவிட்டது.
வட மாகாணத்தைப் பொறுத்தவரை அனை வருக்கும் பொதுத் தொழில். கடற்றொழிலாளர் கள் கூட விவசாயம் செய்வர்.
ஆனால் இன்றைய நிலைமை மிகவும் வேதனை. வீட்டுக்குப்பைகளை அடுத்தவன் வீட்டுக்கு முன் போடுகின்ற கொடுமைத்தனம் அநீதியின் உச்சம் எனலாம்.
வீட்டு வளவைத் துப்புரவு செய்து, அதில் இரண்டு கத்தரிச் செடி வைத்து காய் பிடுங்கி சமையல் செய்து ஆனந்தமடையும் அளவுக்கு எங்கள் மனம் விருத்தியடையவில்லை.
தேவையயன்றால் பண்ணை வீதியில் நேரக்கணக்கும் கிலோமீற்றர் அளவும் பார்த்து நடப்போமேயன்றி வீட்டில் ஒரு கிடங்கு கிண்டி வாழை நடோம் என்பது எங்கள் சத்தியவிரத மாயிற்று.
இந்த நிலைமைகள் மாறி எங்கும் விவ சாயம், எல்லோரும் விவசாயம், எல்லோருக் கும் வயல், எல்லோரும் நெல் விதைப்பு, எல் லோரும் வீட்டுத்தோட்டம் என்ற கோசம் வானைப் பிளந்து எங்கள் மக்களை சிந்திக்க வைத்து அதில் மாபெரும் வெற்றி காண வேண்டும்.
அப்போதுதான் எங்கள் வளவு எங்களுக்கு மருந்தாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.