வடக்கிலுள்ள இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டுமென - முதலமைச்சர்

வடக்கு மாகாணத்தில் பல்வேறு அர சியல் சார் செயற்பாடுகளை செயற்ப டுத்த வேண்டிய நிலையிலுள்ளதால் அங்கிருக்கும் இராணுவத்தினர் அக ற்றப்பட வேண்டுமென தொடர்ந்தும் தாம் வலியுறுத்துவதாக, வட மாகா ண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரன் குறிப்பிட்டுள்ளார்.

வடபகுதியிலுள்ள காணிகள், சுற்று லாத்துறை மையங்கள் உட்பட சக பல பகுதிகள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் ஆ ட்கொள்ளப்பட்டுள்ளதால், மக்கள் பெரும் நெருக்கடிகளுக்குள் வாழ்ந்து கொ ண்டிருப்பதாக நிரூபித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடை பெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பிலான ஊடகவியலாளர் சந்தி ப்பில் முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

 கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தப்படுமென ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட  தகவல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியைத் தொடு த்தனர்.   

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தாலும் சட்டமூலத்தில், ஒருவர் தனது உறவினர் காணாமல் போயிருப்பதாக குறிப்பிட்டால் அதனை ஆராய வேண்டுமெனக்  தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila