முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனவாதத்தை தூண்டி விட்டு மீண்டும் ஆட்சியைப் பெற் றுக்கொள்ள முயற்சித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரி வித்துள்ளது.
மலையக மக்கள் முன்னணி யின் மற்றும் தொழிலாளர் இளை ஞர் முன்னணி என்பவற்றின் வருடாந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸா நாயக்க இதனைக் கூறியுள்ளார்.
மகிந்த குழுவினர் மீண்டும் இனவாத த்தை பரப்புகின்றனர். இவர்களது போராட்ட த்தின் பாதை இனவாதம் மட்டுமே ஆகும். இவர்களுக்கு ஊழலை நிறுத்தப் போவதாக கூறமுடியாதுள்ளது. இவர்களுக்கு சமாதான த்தை ஏற்படுத்துவதாக கூறமுடியாதுள்ளது. இவர்களுக்கு கூறமுடியுமான ஒரே விடயம் உள்ளது. வடக்கில் புலிகள் தலைதூக்கு வதை தடுப்பதற்கு மகிந்தவைக் கொண்டு வர வேண்டும் என்பதே இவர்களது மகுட வாசகம் என்றார் அநுரகுமார.