பங்காளிக்கட்சிகளின் தலையிடியினை தவிர்க்க ஏதுவாக இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை என்பன தொடர்பாக முடிவுகளை எடுப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இது தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினால் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. புளொட் அமைப்பும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தியிருந்தது. எனினும் அக் கோரிக்கைககள் நிராகரிக்கப்பட்டு இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்ரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில், நடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறிப்பாக 20வது திருத்த சட்டம் தொடர்பினில் சுரேஸ்பிறேமச்சந்திரன் ,சம்பந்தன் -சுமந்திரன் ஆகிய இருவரையும் கேள்விக்குள்ளாக்கியுள்ள நிலையினில் அவரை தவிர்த்து கூட்டத்தை கூட்டும் வகையினில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ச்சியாக இரட்டைவேடம் போடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பங்காளிக் கட்சிகளுடன் கூட கலந்துரையாடாது கிழக்குமாகாணத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சிகள் தமக்குள் முடிவெடுத்து கண்ணைமூடிக்கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளன.
அரசாங்கத்துக்கு ஒரு ஆதரவான போக்கை எடுத்தே கிழக்கு மாகாணத்தின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூடி அதில் தான் தீர்மானங்களை எடுக்கமுடியுமே தவிர, ஒரு சில மனிதர்கள், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக முடிவெடுக்கமுடியாது.
இருப்பினும் கடந்த இரண்டரை வருடங்களாக ஒருசில மனிதர்கள் மாத்திரம் கையாண்ட விடயமானது, வெறுமனே தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளது.
ஆகவே அரசாங்கத்துக்கு ஒருபக்கம் முண்டுகொடுத்துக்கொண்டு, இன்னொருபக்கம் எமது காணியை விடுகிறார்கள் இல்லை, காணாமல்போனோருக்குத் தீர்வில்லை, அபிவிருத்தியில்லையென இரட்டைவேடம் போடமுடியாது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
Add Comments