இலங்கையின் தேசிய மொழிகள் மற்றும் சக வாழ்வுக்கான அமைச்சர் மனோ கணேசன் வடகிழக்கினில் ஏற்கனவே செயற்பட்டுவரும் சிவில் சமூக அமைப்புக்களினை உடைத்து மைத்திரி –ரணில் அரசிற்கு பக்கப்பாட்டு வாசிக்கும் சிவில் சமூக அமைப்பொன்றை உருவாக்க முனைப்புகாட்டிவருகின்றமை அம்பலமாகியுள்ளது.அவ்வகையினில் தன்னால் யாழ்ப்பாணத்தினில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துரையாடியுள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் அண்மையினில் இது சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
அங்கு உரையாற்றுகையினில் வரவுள்ள புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு முழுமையான அரசியல் தீர்வாக அமையாது எனினும் முன்பு பல சந்தர்ப்பங்களை இழந்தது போன்று இந்த சந்தர்ப்பத்தையும் இழந்து விட முடியாதென தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு முயற்சிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. எதிர்வரும் 21 ஆம் திகதி அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு வழி நடத்தல் குழுவால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனை அடுத்து புதிய அரசியல மைப்பு ஒன்றை நாடாளுமன்றம் உருவாக்கும். இந்த அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும், மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும், சமஸ்டி முறைமை வேண்டுமென தமிழ் மக்களது எதிர்பார்ப்புள்ளது. ஆனால் இவை எல்லாம் நடை முறை சாத்தியமில்லை. ஆனாலும் இந்த அரசாங்கம் சில விடயங்களை நடத்தி செல்கின்றது. அதில் ஒன்று தான் புதிய அரசியல மைப்பு முயற்சிகள். இந்த புதிய அரசியல மைப்பு தீர்வு ஒன்றை முன்வைக்கும் என்ற நம்பிக்கையில் தான் செயற்பட்டு வருகின்றோம்.
எமக்கு முன்னர் கிடைத்த பல சந்தர்ப்ப ங்களை இழந்துள்ளோம். ஆதலால் தான் கூறுகின்றேன் இந்த சந்தர்ப்பத்தையும் நாங் கள் இழந்து விட கூடாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடுத்த கட்டத்தை நோக்கி நாங் கள் நகர வேண்டும் என்பதே எனது எண்ண மாகும். கடந்த காலங்களில் தமிழ் மக்களு க்கு கிடைத்த தீர்வு தொடர்பான சந்தர்ப்பங் களில் காணப்பட்ட விடயங்களை விட இந்த புதிய அரசியலமைப்பில் பெரிதான விடயங் கள் இல்லை என்ற உண்மையினை நான் கூறுகின்றேன்.
இந்த புதிய அரசாங்கத்தின் கீழ் சில மாற் றங்கள் நடைபெற்றுள்ளன. எனினும் மாற்ற ங்கள் மிகவும் மந்தமான வகையிலேயே நடைபெற்று வருகின்றது. அதற்காக இந்த அர சாங்கத்தை புறந்தள்ளிவிட முடியாது. மொழிப் பிரச்சினையை தீர்த்து விட்டால் அரசியல் தீர்வு கிடைத்து விடும் என்று கூற முடியாது. நான் அரசாங்கத்தினை விட்டு வெளியே வராமல் எமது மக்களுக்காக உள்ளிருந்தே போராடி வருவதாக அவர் அரசிற்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.
ஏற்கனவே வடகிழக்கினில் செயற்பட்டுவந்த அரசசார்பற்ற அமைப்புக்களினை புறந்தள்ளி மனோகணேசன் நிறுவியுள்ள அமைப்பின் ஊடாக புதிய அரசியலமைப்பிற்கான ஆதரவு தேடும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.
Add Comments