ஞானசார தேரர் நாட்டை விட்டு ஓட்டம்? - போலி கடவுச்சீட்டில் ஜப்பான் சென்றார்

பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் போலி கடவுச்சீட்டு மூலம் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்து வௌியிட்டுள்ளது. பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக பல் வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் இருந்த போதும் நல்லாட்சியிலும் அவர் சட்டத்தின் பிடியில் சிக்காமல் வலம் வந்து கொண்டிருந்தார்.

அவருக்கு, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் ஆதரவும் பாதுகாப்பும் இருப்பதாக அப்போது பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் விஜேதாச ராஜபக்‌சவின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டவுடன் திடீர் என்று மௌனித்துப் போன ஞானசார தேரர் சில நாட்களுக்குக்குள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக செய்திகள் கசிந்தன. எனினும் குறித்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை,
இந்நிலையில் சிங்கள புலனாய்வு இணையத்தளம் ஒன்று ஞானசார தேரர் போலி கடவுச்சீட்டு மூலம் கடந்த 01ம் திகதி ஜப்பானுக்குத் தப்பிச் சென்றிருப்பதாக ஆதாரத்துடன் செய்தி வௌியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்களில் ஒருவரான உலபனே சுமங்கல தேரர் என்பவரே ஞானசார தேரருக்கு போலி கடவுச்சீட்டு பெற உதவியுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் இருவரும் ஜப்பானில் உள்ள விகாரையொன்றில் வசித்து வருவதாகவும் அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila