நொதேர்ன் பவர் மின் உற்பத்தி நிலையத்தை இழுத்து மூடும் மல்லாகம் நீதிமன்றின் கட்டளையை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
சுன்னாகம் உள்ளிட்ட பிரதேசங்களில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணை கலந்த வழக்கில், சுன்னாகம் நொதேர்ன் பவர் தனியார் மின் உற்பத்தி நிலையம் மல்லாகம் நீதிமன்றால் சீல் வைத்து மூடப்பட்டது.
சுன்னாகம் மின் உற்பத்திச்சாலையின் தொழிற்பாடுகளை மீள ஆரம்பிக்;கவும் மல்லாகம் நீதிவான் மன்றால் வழங்கப்பட்ட கட்டளையைத் தள்ளுபடி செய்யுமாறும் மேல்முறையீட்டு நீதிமன்றினில் நொதேர்ண் பவர் நிறுவனத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விண்ணப்பத்தை ஆராய்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றம் வழக்கை மல்லாகம் நீதிவான் மன்றத்துக்கு மீண்டும் பாரப்படுத்தியுள்ளது.