எழிலன் இராணுவத்திடம் சரணடையவில்லையாம்! நீதிமன்றத்தில் இராணுவம் தகவல்


இலங்கையில்  இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணு வத்தின் உத்தரவை அடுத்து, சரணடைந்து காணாமல் போகச் செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உட்பட ஏனைய 5 பேரும் சரணடையவில்லை என்று ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோண மலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பா ளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசித ரன் உள்ளிட்ட 6 பேரது வழக்கு நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி நாட்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறு ப்பினர்கள் உட்பட ஒரு நாளேனும் குறித்த அமைப்பில் அங்கம் வகித்திருந்தால் சரண டைய வேண்டும் என்ற இராணுவத்தின் உத்தரவுக்கு அமைய இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இராணுவத்திடம் சரண டைந்த நிலையில் காணாமல் போகச் செய்ய ப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத் துரைசசிதரன் உள்ளிட்ட ஏனையோர் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தொட ர்ச்சியாக விசாரணை இடம்பெற்று வந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் சார் பில் அவரது மனைவியான வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிரு ஷ்ணகுமார் ஜெயகுமாரி,விஸ்வநாதன் பால நந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன் னம்மா உள்ளிட்ட பன்னிரண்டு பேர் இந்த ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய் திருந்தனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்ற வழக்கு விசாரணையின் போது, இரா ணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடு தலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டி யல் தம்மிடம் இருப்பதாகவும் அந்த ஆவண த்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணை கடந்த யூலை மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற நிலையில், இறுதி யுத்தத்தில் 58 ஆவது படைப்பிரிவிடம் சரணடைந்த தமி ழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள், புனர் வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக தெரி விக்கப்பட்டு மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தன வால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவ ணத்தை ஏற்றுக்கொள்ள முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதேவேளை குறி த்த அறிக்கையானது முழுமையற்ற ஒரு ஆவணமாக காண ப்படுவதாக அறிவி த்த நீதிபதி, அனை த்து விபரங்களும் அடங்கிய முழுமை யான ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தர விட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் குறி த்த வழக்கு விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது எதி ராளி சார்பில், புனர் வாழ்வுக்கு உட்படு த்தப்பட்டோர் தொட ர்பிலான ஆவண ங்களின்படி எழில னுடைய பெயர் தமது பெயர்ப்பட்டியலில் இல்லை எனவும் எனவே அவர் இராணு வத்திடம் சரணடை வில்லை என்ற கரு த்துப்படவும் பதிலளி க்கப்பட்டதாக குறி த்த வழக்கை விசாரித்த சட்டத்தரணி க.ரத்னவேல் தெரிவித்தார்.

எது எவ்வாறிரு ப்பினும் இலட்சக் கணக்கான மக்கள் மத்தியில் வைத்து இராணுவத்திடம் தனது கணவனை ஒப்படைத்தாக தெரி வித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டுள்ள எழில னின் மனைவியான வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், தொட ர்ந்தும் நீதி கோரிய தனது போராட்டம் தொட ரும் என்று தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila