நல்லாட்சி அரசிற்கு இரண்டு முகம்:பாப்லோ டி கிரெய்ப்!

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசிற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் உரியவகையினில் பயன்படுத்தப்படவில்லையென ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்தார். உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப்பே இன்று மதியம் யாழ்.பொதுநூலகத்தினில் இடம்பெற்ற சந்திப்பினில் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையினில் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் கைதிகளது போராட்டம்,இன்றைய ஹர்த்தால் மற்றும் காணாமல் போனோர் விவகாரமென பல விடயங்களை பற்றி நான் அறிந்துள்ளேன்.எனது அறிக்கை இம்முறை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென்பதை அறியத்தருகின்றேன்.நிச்சயம் அது மாற்றம்அ மிக்கதாக இருக்கும்.
இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் பரஸ்பரம் புரிந்துண்வு ஏற்படவேண்டுமென அவர் தெரிவித்தார்.இலங்கையினில் எல்லாமுமே மந்த கதியினில் நடைபெறுகின்றது.ஜநாவினில் வழங்;கப்பட்ட உறுதி மொழிகள் கேள்விக்குள்ளாகி வருகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே கடந்த இரண்டு வருடங்களினுள் ஜந்து தடவைகள் இலங்கை வந்துள்ளீர்கள் நீங்கள் சாதித்தது என்னவென்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.அதே போன்றே களத்தினில் முன்னெடுக்கப்படும் அரசியல் கைதிகளது போராட்டம், காணாமல் போனோர் விவகாரம் தொடர்பிலான போராட்டம் மற்றும் காணி விடுவிப்பு போராட்டங்களினை நேரினில் தரிசீலித்துள்ளீர்கள்.கண அனுபவமும் ஜநாவினில் தாங்கள் மேம்போக்காக விடுக்கும் அறிக்கைக்கும் பாரிய முரண்பாடுகள் உள்ளதை ஏற்றுக்கொள்கிறீர்களாவென பதிவு இணையத்தின் ஊடகவியலாளரது கேள்விக்கும் அவர் பதிலளிக்காது தாண்டிச்சென்றார்.
இதனிடையே அரச சார்பற்ற அமைப்புக்களினை சந்திப்பதென்ற பேரினில் மட்டுப்படுத்தப்பட்ட சிலதரப்பினை மட்டுமே அழைத்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணைய தலைவர் தே.தேவானாந்த் குற்றஞ்சாட்டினார்.அதே போல இந்த அரசு சர்வதேசத்தின் முன்னதாக ஒரு நாடகத்தையும் நாட்டினில் இன்னொரு நாடகத்தையும் ஆடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila