அதற்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நாளை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் காலை 9 மணிக்கு பொதுமக்கள் அனைவரையும் ஒன்று கூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது, நகரப்பகுதி மற்றும் நிகழ்வு இடம்பெறும் இடங்களில் போராட்டம் மற்றும் வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதற்கும், எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க முடியாதவாறும் யாழ்.பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினைப் பெற்றுள்ளனர். ஜனாதிபதியின் வருகையின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையில் போராட்டங்களையோ, எதிர்ப்பு நடவடிக்கைகளையோ முன்னெடுத்தால் கைது செய்வதற்கும், எந்தவொரு எதிர்ப்பு நடவடிக்கையையும் முன்னெடுக்காது தடுப்பதற்கும் யாழ்.பொலிஸார் இன்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் தடை உத்தரவினைப் பெற்றுள்ளனர். |
நாளை யாழ். வரும் ஜனாதிபதிக்கு எதிராகப் போராட்டம் நடத்த திட்டம்! - நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு
Related Post:
Add Comments