அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தவே அரசியல் கட்சிகள் மாவீரர் நாளை நடத்துகின்றனர்


தற்போது மாவீரர் நாளை அரசியல் கட்சிகள்  கூறுபோட்டுக்கொண்டு நடத்துவது என்பது  அரசுக்கு  நற்பெயரை ஏற்படுத்தவே என   காணாமல் ஆக்கப்பட்டவா்களின்  சங்கத்தின் கிளிநொச்சி தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில்  இடம்பெற்ற  ஊடகவியலாளர்களை சந்திப்பிலேயே  இவ்வாறு தெரிவித்துள்ளார். அவா் மேலும் தெரிவிக்கையில்
அரசுக்கு சர்வதேச ரீதியில் நற்பெயரை ஏற்படுத்துவதற்கே போட்டி போட்டுக்கொண்டு மாவீரர் நாளை நடத்துகின்றனா். தங்களுடைய பிள்ளைகளை நாட்டுக்காக கொடுத்த பல தாய்மார்கள் விளக்கேற்றமுடியாத நிலையில் ஓலை குடிசைகளில் ஓருவேளை உணவுக்காக ஒரு வேளை தேனீருக்கா கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் மாவீரனை பெற்ற  தாயை கவனிக்காது மாவீரர் நாளை கூறுபோட்டுக்கொண்டு நடத்துகின்றனர்.
2009 க்கு முன்  எவ்வாறு மாவீரர் நாள் நடத்தப்பட்டதோ எந்தளவுக்கு புனிதத்தன்மையோடு அனுஸ்டிக்கப்பட்டதோ அந்த நிலைமை தற்போது இல்லை என அவர்  தெரிவித்துள்ளார்.    தலைவா் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கோ, மாவீரர் நாளை நடத்துவதற்கோ நல்லாட்சி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்றால் அது சர்வதேசத்திற்கு இங்கு நல்லாட்சி நடக்கிறது என்பதனை காட்டுவதற்கே  எனவும் அவர் தெரிவித்தரர்


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila