| திறந்த கலந்துரையாடல் நிறைவு பெற்ற பின்னர் கருத்தரங்கில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம், வடக்கு- கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் ஆர். வரதராஜப்பெருமாள் மற்றும் முன்னாள் வடமாகாணசபை வேட்பாளர் மு.தம்பிராஜா ஆகியோரை நோக்கி உரையாற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் போது குறுக்கிட்ட இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஆர். வரதராஜப்பெருமாள் தேர்தல் தொடர்பான இந்தக் கருத்தரங்கை அரசியல் கூட்டமாக மாற்ற வேண்டாம் எனப் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நான் அரசியல் பேசவில்லை என்ற உத்தரவாதத்துடன் உரையாற்றுவதற்கு முன்வந்தார். அவர் உரையாற்றி முடித்த பின்னர் வடக்கு- கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஆர். வரதராஜப்பெருமாளை நோக்கி உரையாற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், அந்த அழைப்பை ஏற்க மறுத்த வரதராஜப்பெருமாள் "எங்களுக்கு எல்லாமே சிவாஜி தான்", அவர் உரையாற்றினால் போதும்என தெரிவித்தமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. |
எங்களுக்கு எல்லாமே சிவாஜி தான்! - வரதரின் பதில்
Add Comments


