மக்களை எச்சரிக்கும் நடவடிக்கை! கோப்பாய் துயிலும் இல்ல வாயிலில் பவள் கவசவாகனம்!?

Sri-Lankan-army-soldiers-001

மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மக்கள் செல்வதை தடுப்பதற்காக யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் பவள் கவச வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நவம்பர் 27 இனைக் கடைப்பிடிப்பதற்கு மக்கள் தயாராகிவருகின்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை சென்றடைய விடாமல் மக்களை தடுக்கும் நடவடிக்கையினை படைத்தரப்பு முன்னெடுத்துவருவதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணத்தின் பிரதான துயிலும் இல்லமாக விளங்கிவந்த கோப்பாய் துயிலும் இல்லத்தினை முழுமையாக அபகரித்துள்ள படைத்தரப்பினர் அதன் உள்ளே தமது இராணுவ முகாம் ஒன்றினை நிறுவியுள்ளனர்.
துயிலும் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்று தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தமுடியாத நிலை மக்களுக்கு தொடர்கிறது.
இந்த ஆண்டு தாயகத்தின் பல துயிலும் இல்லங்களில் சுடரேற்றி வணக்கம் செலுத்த மக்கள் தயாராகியுள்ள நிலையில் கோப்பாயில் படையினர் இவ்வாறான நடவடிக்கையினை முன்னெடுத்திருப்பது அவர்களின் உண்மையான மனோ நிலையை வெளிப்படுத்துகின்றது என்கின்றனர் மக்கள்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila