புதுவருடத்தன்று இலங்கையில் பறக்கின்றது சீனா நாட்டின் தேசியக் கொடி

ஹம்பாந்​தோட்டை, மாகம்புற துறைமுகத்தில் 2018ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று சீனா நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
குறித்த துறைமுகமானது கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி சீனாவின் மார்சன்ட் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு 99 வருட குத்தகை அடிப்படையில் கையளிக்கப்பட்டது.
அதற்கு பின்னர் முதற் தடவையாக இன்று சீனாவின் தேசியக் கொடி ஹம்பாந்​தோட்டை, மாகம்புற துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அங்கு எமது நாட்டின் தேசியக்கொடி மற்றும் துறைமுக அதிகாரசபையின் கொடி என்பன ஏற்றப்பட்டிருந்ததுடன், இலங்கையின் தேசியக்கொடி ஏனைய கொடிகளை விட ஒன்றரை அடி உயரத்தில் ஏற்றப்பட்டிருந்தது.
எனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கையின் கொடியின் உயரம் குறைக்கப்பட்டு ஏனைய கொடிகளின் உயரத்துக்கு சமனாக கொண்டுவரப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila