பிரித்தானியாவின் வடபகுதியின் லிவர்பூல் நகரில் பல மாடிகளைக் கொண்டு அமைந்துள்ள வாகனத் தரிப்பிடமொன்றில் திடீரென தீ பரவியுள்ளது.
லிவர்பூல் நகரில் அமைந்துள்ள கிங்ஸ் டொக் வாகனத் தரிப்பிடத்திலேயே நேற்று இரவு இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், சுமார் 1,600ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், சுமார் 21 தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவொரு பாரிய தீ விபத்தெனவும், தீயணைப்புப் படை வீரர்கள் கூறியுள்ளனர்.
தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து வாகனங்களும் இந்த தீவிபத்தில் எரிந்து சாம்பலாகியிருக்கும் என தாம் நம்புவதாகவும் காப்புறுதி நிறுவனங்களை வாகன உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளும்படியும் பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழப்புக்கள் எதும் ஏற்படவில்லை உள்ள தீயணைப்பு வீரர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.