முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஓர் பெண் வேட்பாளரை ஒப்பமிட அனுமதிக்காது குறித்த வேட்பாளரை கடத்தி வைத்திருந்து வேட்பாளரை மாற்றியதான முறைப்பாடு தொடர்பில் ஆணைக்குழு உண்மையை கண்டறிந்து பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவிற்கு முறையிட்டுருந்தனர்
குறித்த விடயம் தொடர்பில் ஆணைக்குழு நேற்றைய திறம் விசேடமாக ஆராய்ந்த்து. இதன் அடிப்படையில் குறித்த சபையில் ஓர் பெண்ணிற்கு தனி ஒருவரால் இழைக்கப்பட்ட அநீதியை அக் கட்சியே ஏற்காது முறையிட்டதன் அடிப்படையில் விசேட கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் குறித்த பெண்ணை கடத்தியதாக கூறப்படும் நால்வர் , அதன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை மீளப்பெறுமாறு கோரியோர் ஆகியோர் கண்டிப்பாக உடன் கைது செய்யப்பட்டு தேர்தல் முடியும்வரையில் பிணையில் வெளிவர முடியாதவாறு சிறையிடப்படவேண்டும்.
இதேநேரம் குறித்த சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் வகி பங்கு தொடர்பில் ஆராயப்பட வேண்டும். அதோபோல் சம்பவம் இடல்பெற்ற இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரசன்னம் இருந்த்தா ? எனவும் ஆராயப்பட வேண்டும். இவ்வாறான சந்தேகங்களிற்கு பதிலும் அதற்கான பதில் நடவடிக்கைகளின் பின்பே புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளிற்கான தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் . என்ற முடிவினையே தேர்தல்கள் ஆணைக்குழு எட்டியுள்ளது.
இறுதி முடிவு தொடர்பில் இன்றும் ஆராயப்படவுள்ளது