திருமலை கூனித்தீவில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் அவரது மனைவியான தீப்தி போகொல்லாகம ஆகியோருக்கு எதிராக குரல் கொடுத்த தமிழர்கள் பழிவாங்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் தொன்ம நிலமான சூடைக்குடா பகுதியில் அமைந்துள்ள குன்றத்தூர் மத்தளமலை திருக்குமரன் ஆலயத்திற்குள் புகுந்து இலங்கை காவல்துறை உதவியுடன் இன மோதலை தூண்டியது மட்டுமல்ல மத நல்லிணக்கத்திற்க்கு கேடு விளைவித்தது ஆளுநரும் அவரது மனைவியுமே.அத்துடன் பொது இடத்தில் ஆபாசமாக பேசி தமிழர் வழிபாட்டை குழப்பியிருந்தனர்.
ஆனால் தற்போது சூடைக்குடா கோவில் நிர்வாகத்தை சேர்ந்த மூன்று தமிழர்களை இன்று கைது செய்து அரசு சிறையில் தள்ளியிருக்கிறது.
அங்கிருந்த பௌத்த விகாரையினை இடித்தமை மற்றும் தொல்லியல் திணைக்கள காணியை ஆக்கிரமித்தமை தொடர்பில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


