ஒரு குறிப்பிட்ட தமிழ் கட்சியின் ஏற்பாட் டில் வடபிராந்திய போக்குவரத்து சபையின் ஒருபகுதி சாரதி களும் நடத்துநர்களும் இன்று மேற்கொள்ளவுள்ளதாக அறிவித் துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு தமிழ் மக்கள் மத்தி யில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்களின் கருத்துக்களை பதிவு செய்வதாக புத்திஜீவிகள் சமூ கம் விடுத்த கருத்துரைப்பில், இன்றைய சூழ்நிலையில் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தலைவராக இருந்து எமது பிரச்சினைகளை சர்வதேச பிரதிநிதிகளிடம் மிக ஆணித் தரமாக தெரிவித்து வருகிறார்.
இது ஆட்சியாளர்களுக்கும் ஒரு சில தமிழ் அரசியல் கட்சியினருக்கும் மிகுந்த பாதக த்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழினம் தொடர்பில் முதலமைச்சர் தெரி வித்து வரும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் மிகவும் ஆணித்தரமானவை. யாராலும் நிரா கரிக்க முடியாதவை.
இந்நிலையில் முதலமைச்சருக்கு எதிர்ப்பு இருப்பது போல காட்டுவதன் ஊடாக அவ ரின் கருத்துக்களை பலவீனப்படுத்த உயர் மட்டச் சதி நடந்து வருகிறது.
இச்சதித் திட்டத்தை அரங்கேற்ற வடபிராந்திய போக்குவரத்து சபையின் ஒரு பகுதி சாரதிகளையும் நடத்துநர்களையும் பயன் படுத்தி வடக்கின் முதலமைச்சருக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு நடத்துவது போன்ற
புலக்காட்சியை ஏற்படுத்த சிலர் முற்பட்டுள்ளனர்.
இந்தச் சதித்திட்டத்துக்கு தமிழினப் பற்றுக் கொண்ட வடபிராந்திய போக்குவரத்துச் சபை யின் சாரதிகளும் நடத்துநர்களும் ஒரு போதும் இடம்கொடுக்க மாட்டார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
அதேபோல் குறித்த தொழிற்சங்கமும் தனது பொறுப்பை உணர்ந்து செயற்படும் என்று நம்பிக்கை வெளியிட்ட புத்திஜீவிகள்,
வட பிராந்திய போக்குவரத்து சபை சாரதி களும் நடத்துநர்களும் தமது பிரச்சினை களைப் பேசித் தீர்ப்பதற்கு அனைத்து உரிமை யும் கொண்டவர்கள்.
அவர்கள் தமது பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தும் முன்னெடுத்து பிரச்சினை களைச் சுமுகமாகத் தீர்க்க வேண்டும் எனவும் புத்திஜீவிகள் சமூகம் கேட்டுள்ளது.